புதுடெல்லி: இந்தியாவின் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், வரும் ஞாயிறு முதல், அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது அமீரக அரசு.

இந்திய விமானங்களுக்கு, பிரிட்டனும், பிரான்ஸ் நாடும் தடைவிதித்த சில நாட்களில், அமீரக அரசும் இந்த முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானங்களுக்கு, பிரான்ஸ் நாடு 10 நாட்கள் தடை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் தனது இந்தியப் பயணத்தையே ரத்துசெய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரக நாட்டில், கிட்டத்தட்ட 10 மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த அளவு கிட்டத்தட்ட ஒரு குடிமகனுக்கு ஒன்று என்ற அளவிலானது என்பதாகவும் அமீரக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு, அவர்களின் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.