எமிரேடு விமானங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக தவிர்க்க நடவடிக்கை

துபாய்:

எமிரேடு விமானங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
பல நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன.
பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எமிரேட் விமானங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக பேப்பர் பொருட்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் ஆண்டுக்கு 81.7 மில்லியன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

துபாயில் ஒவ்வொரு மாதமும் 1,50,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.