டில்லி:

புகை மாசு தொடர்பாக, பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோக்ஸ்வேகன் நிறுவனம், பாதுகாப்புகள் நிறைந்த டீசர், பெட்ரோல் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் டீசல் கார்களில், இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட   அளவை விட, 40 மடங்கு அதிகமான அளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது தெரியவந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில், ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, டீசல் கார்களில் புகை மாசு தொடர்பாக,  சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடி கருவி பொருத்தப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில், வோக்ஸ்வேகன் டீசல் கார்களை விற்பனை செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து.

ஒன்றை அந்த நிறுவனம் பொருத்தியது தெரியவந்தது. காற்று மாசு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில், வோக்ஸ்வேகன் நிறுவன வாகனங்கள் விற்பனைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு கூறிய தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி,ஆதர்ஷ் குமார் கோயல், வோக்ஸ்வேகன் டீசல் கார்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட மோசடியான உபகரணத்தை பொருத்தியதால் ரூ. 500 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும்,  அபராத தொகையை 2 மாதங்களுக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.