சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 17ந்தேதியுடன் 3வது கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், 18ந்தேதி ( திங்கள் கிழமை)  முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக துறைகள் மற்றும் அலுவலகங்களிலும் 50% சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 2 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்றப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் மற்றும் பதிவாளர் என்.கிருஷ்ண மோகன் ஆகியோர்  தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கிருஷ்ண மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”எதிர்வரும் 18.05.2020 திங்கள்கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவின்படி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகள் மற்றும் அலுவலகங்கள் ஐம்பது சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 3 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற வேண்டும்.
அனைத்து அலுவலகங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின்போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும்”.
இவ்வாறு  அதில் கூறி உள்ளார்.