c3

குழந்தைத் தொழிலாளர்களே இல்லையென்ற நிலையினை உருவாக்கும் விதமாகத் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12ம்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

c2
14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு கடையிலோ, நிறுவனத்திலோ, உணவகங்களிலோ அல்லது வேறுஎந்த தொழில்களிலோ பணியமர்த்தக் கூடாது. அது குடும்பத்தொழிலாக இருந்தாலும் குற்றமே என்று சட்டமிருந்தது.
ஆனால், தற்பொழுது மத்திய அரசு இந்தச் சட்டத்தினை வலுவிலக்கச் செய்யும் விதமாக, “பள்ளி நேரத்திற்குப் பிறகு குடும்பத் தொழிலில் ஈடுபடுத்துவது தவறில்லை எனச் சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. எனினும் தண்டனைகளைக் கடுமையாக்கியுள்ளது.

c1
இந்த மசோதாவை ராஜ்ய சபாவில் ஜூலை 19 அன்று நிறைவேற்றப் பட்டது. அதனைச் செவ்வாய்கிழமையன்று லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்டது.
குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி 14 வயதிற்குப்பட்ட குழந்தைகள் 18 அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்து இருந்தது. தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள்மூலம், இனி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குடும்பத்திற்கோ குடும்ப நிறுவனங்களுக்கோ உதவி செய்யலாம். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இருப்பினும் 14- 18 வயதிற்குப்பட்ட சிறுவர்கள் அபாயகரமான தொழில்களில் ஈடுபட அனுமதி கிடையாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

c4
விதிமுறைகளை மீறி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்தத் திருத்தப்பட்ட மசோதா வழிவகை செய்துள்ளது. அதேவேளையில், முதல் குற்றத்திற்கு பெற்றோர்களுக்கு எந்தத் தண்டனையும் அளிக்கப்படாது. வேலைக்கு அமர்த்துபவர்களே முதல் குற்றத்திற்கு பொறுப்பாவார். பெற்றோர்களைப் பொறுத்தவரை திரும்பத் திரும்ப தவறு இழைத்தால் 10 ஆயிரம் வரை தண்டனை விதிக்கப்படலாம்.

c8
குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிக்கு விதிக்கப்படும் அபராதமானது தற்போதைய தொகையான 10-20 ஆயிரம் ரூபாயிலிருந்து 20-50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

c7
இரண்டாவது முறை சட்டத்தை மீறிக் குழந்தைகளை பணிக்குச் சேர்த்தால் குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வந்தது, அதனைத் தற்போது ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

c9
இந்தச் சட்டதிருத்தம் குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தரேயா கூறுகையில், ” இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டதிருத்தம். பள்ளி நேரத்திற்கு பிறகே குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுப்படுத்தலாம் ” என்றார்.

குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் இந்தச் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக ஏழ்மைநிலையில் இருக்கும் மக்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.