விளையாட்டு வீரர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு: உயர்மட்ட குழு அமைப்பு

சென்னை:

மிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக  உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது.

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் 2 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப் படும் என்று சுதந்திர தின உரையின்போது முதல்வர் எடப்பாடி அறிவித்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அதை 3 சதவிகிதமாக உயர்த்துவதாக அறிவித்தார்.

கடந்த 17ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில், விளையாட்டு வீரர்கள் சார்பில் முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி, மாணவர்க ளுடன் சேர்ந்து கூடைப்பந்து விளையாடி அசத்தினார். தொடர்ந்து பாராட்டு விழாவில் பேசிய முதல்வர்,  விளையாட்டு வீரர்களுக்கு   அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கான உள்ஒதுக்கீடு 3 சதவிகிதமாக உயர்த்துவாக கூறினார். அதையடுத்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து 3% உள் ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக . தலைமை செயலாளர்  கிரிஜா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் 12 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு 3% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.