நெதர்லாந்து : அகதிகள் முகமாக மாறும் சிறைச்சாலைகள்

நெதர்லாந்து

குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் காலியாக உள்ள சிறைச்சாலைகளை நெதர்லாந்து அரசு  அகதிகள் தங்கும் முகாமாக மாற்றியது.

நெதர்லாந்து நாட்டுக்கு, அக்கம் பக்கத்து நாடுகளில் இருந்து ஆதரவு தேடி வருவோர் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருகிறது.  சென்ற வருடம் மட்டும் சுமார் 50000க்கும் மேற்பட்டோர் அகதிகளாக நெதர்லாந்துக்கு வந்துள்ளனர்.   இத்தனை பேரையும் தங்க வைக்க தேவையான குடியிருப்புக்கள் இன்றி அரசு தவித்து வந்தது.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.  இதனால் பல சிறைச்சாலைகள் ஆட்களின்றி காணப்பட்டது.  இதனால் அரசு, அகதிகளை தங்க வைக்க  சிறைச்சாலைகளை உபயோகப் படுத்தத் தொடங்கினர்.

அகதிகளுக்கு நாட்டில் பணிபுரிய அனுமதி இல்லை.  ஆனாலும் அவர்கள் டச் மொழியில் பேசவும் சைக்கிள் ஓட்டவும் கற்றுக் கொள்கிறார்கள்.  நெதர்லாந்து நாட்டில் வாழ இவ்விரண்டும் அவசியத் தேவைகள் ஆகும்.  சமூக ஆர்வலர்கள் அகதிகளிடம் இவ்வாறு சிறைச்சாலையில் தங்க வைப்பது பற்றி அவர்களுடைய கருத்தை கேட்டதற்கு, தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும், வீட்டினுள் இருப்பதை போன்றே உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.