கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் ஆராவரா வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இரண்டு ஆண்டுகள் கழித்து நேற்று ரிலீஸானது. படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.

படம் ரிலீஸான அன்றே சென்னையில் மட்டும் நேற்று ரூ. 74 லட்சம் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் எனை நோக்கி பாயும் தோட்டா கூடுதலாக வசூலிக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே அந்த படம் தமிழ் ராக்கர்ஸில் நேற்றே கசிந்துவிட்டது.