Random image

தனுஷின் ’ எனை நோக்கி பாயும் தோட்டா ‘ தீபாவளிக்கு ரிலீஸ்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவகியுள்ள ’ எனை நோக்கி பாயும் தோட்டா ’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கும் மேல் தயாரிப்பிலிருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

enai

கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் சா்காா், என்.ஜி.கே., சண்டக் கோழி 2, விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு வளி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு படமாக அந்த தேதியில் இருந்து மாறி வருகிறது. விஸ்வாசம் படம் பொங்கலுக்கும், சண்டக் கோழி 2 ஆக்டோபா் 18ம் தேதியும் வெளியாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் என்.ஜி.கே. திரைப்படம் தீபாவளியில் இருந்து தள்ளிப்போகும் என்று தொிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இயக்குநா் சசிக்குமாா் தனுஷ்க்கு அண்ணனாக நடித்துள்ளாா். இது காதல் த்ரில்லர் நாடக திரைப்படமாகும். இரண்டு வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ தீபாவளிக்கு ரிலிஸாகிறது என்ற அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.