‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – திரை விமர்சனம்

 

 

தனுஷ் நடிப்பில் ‘Assault’ படம்.

 

இது காதல் படமா, அண்ணன்-தம்பி பாச படமா, கேங்ஸ்டர் படமா, க்ரைம் த்ரில்லரா, என்று சொல்ல முடியாத, எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி படம்.

 

மேகா ஆகாஷ் இந்த படத்தின் நாயகி.

 

பல்வேறு காரணங்களுக்காக வெகுநாட்களாக தயாரிப்பில் இருந்த படம் என்ற எண்ணத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் படம் ‘பிரமாதம்’. தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவரையும் கவரும் படம்.

 

போஸ்ட் ப்ரொடக்சனில் ஒரு படத்தை நிறைவாக தரமுடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த படம்.

 

நடிகை லேகாவை   (மேகா ஆகாஷ்)    வைத்து படமெடுக்கும் இயக்குனர் குபேரன் (செந்தில் வீராசாமி – டைரக்டர் கவுதம் மேனனின் அஸோஸியேட்) தன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே ரகுவை (தனுஷ்) காதலிப்பது தெரிந்து.

 

லேகாவை தனது அடுத்தடுத்த படங்களில் நடித்த பிறகே தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சிந்திக்கமுடியும் என்று கட்டாயப்படுத்தி ரகுவிடமிருந்து பிரிக்கிறார்.

 

குபரேனிடமிருந்து லேகாவை ரகு மீட்டாரா, திருமணம் செய்தாரா என்பது தான் மீதி கதை.

 

இதில் லேகாவிற்கு உதவும் ‘திரு’ என்ற போலீஸ் அதிகாரியாக வருகிறார் இயக்குனர் சசிகுமார்.

 

சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போன  ரகுவின் அண்ணன் உளவுத்துறை போலீஸ் அதிகாரியான ‘திரு’வை,   சக போலீசாரே ஏன் சுட்டனர் என்ற மற்றொரு கோணத்திலும் படம் செல்கிறது.

 

பாடல்கள் அனைத்தும் இனிமை,  ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் இன்றைய கல்லூரி மாணவர்கள் பள்ளி பருவத்திலிருந்து  கேட்ட பாடலாக இருந்தாலும், காட்சியாய் பார்ப்பதற்கு அருமை.

 

மொத்தத்தில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ஒரு படத்தை முழுநீள படமாக தரும் ‘தொழில்-நுட்பத்தில்’ பிரகாசிக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.