கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின் பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் டீஸர் ரிலீஸாகி ரசிகர்களிடம் ஆராவரா வரவேற்பை பெற்றது. ஆனால் மீண்டும் இப்படம் பணப்பிரச்சனைகளில் சிக்கியது. இந்தப் படத்தின் ரிலீஸ் கேலிக்கு உள்ளானது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் படம் திரைக்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.