எனை நோக்கி பாயும் தோட்டா’ பாடல்கள் இணையத்திலிருந்து நீக்கம்…!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இப்படத்திலிருந்து வெளியான ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ மற்றும் ‘நான் பிழைப்பேனோ’ பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இந்நிலையில் திடீரென்று ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ சம்பந்தப்பட்ட அனைத்து பாடல்கள் மற்றும் டீஸர் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதனால், இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இப்படத்தின் இசை உரிமை கவுதம் மேனனிடம் இருந்து தற்போது சோனி நிறுவனத்துக்கு மாற்றிவிட்டதால் சோனி நிறுவனத்தின் யூ டியூப் பக்கத்தில் தான் பாடல்கள், டீஸர் இடம்பெற வேண்டும். யூ டியூப் பக்கத்திலிருந்து ப்ரைவேட் செய்து வைத்திருக்கிறோம் , விரைவில் அதே வியூஸ் எண்ணிக்கையுடன் மாற்றப்பட்டுவிடும் என படக்குழுவில் பணிபுரிந்தவர்கள் கூறி வருகின்றனர்.