Random image

ஜம்மு காஷ்மீர்: ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவ முயலும்  பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக எல்லையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவ்வப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி கலகத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தின் கவுகாம் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி களுக்கும்,  பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை முதல் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக   பாராமுல்லா – குவாலிகண்ட் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து அவர்களுடன் தொடர்ந்து பலமணி நேரமாக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.