பிளாஸ்மா தெரபியில் வியக்கத்தக்க முடிவுகள்.. கெஜ்ரிவால் பெருமிதம்…

டெல்லி:

பிளாஸ்மா தெரபியில் வியக்கத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமான நபர்களிடம் இருந்து  பெறப்படும் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாவை கொண்டு சிகிச்சை அளித்தால், நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற சிகிச்சைகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது  தமிழகம் உள்பட சில மாநிலங்களில் நடத்தப்பட்டு வந்தது. இதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. டெல்லியில்  பிளாஸ்மா சிகிச்சை சோதனைகளில் வெற்றி கிடைத்துள்ளதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

இன்று பைலரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் எஸ்.கே.ஸ்டாலின் உடன் காணொலி காட்சி மூலமாக  செய்தியாளர்களை சந்தித்த   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,

டெல்லியில் கடந்த 4 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள  எல்.என்.ஜே.பி  மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சையை அளிக்கப்பட்டது. அதன்முடிவுகள் வியத்தகு வகையிலும், நம்பிக்கை அளிப்பதாக உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியிருப்பதாக கூறியவர்,  இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மேலும் பலருக்கு இந்த சிகிச்சை வழங்க இருப்பதாகவும் கொரோனாவில் இருந்து மீண்ட மக்கள், ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பைலரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் எஸ்.கே.ஸ்டாலின் ‘பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 4 நோயாளிகளுக்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது.  மேலும், எங்களிடம் மேலும் 2-3 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில்  ரத்தம் மற்றும் பிளாஸ்மா தயாராக உள்ளது. இன்று அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இருக்கிறோம் என்று கூறினார்.