பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு….!

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் எண்டமால் ஷைன். இந்நிறுவனம் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு இருப்பதை உறுதி செய்துள்ளது தமிழக அரசு.

இந்தியில் பிக்பாஸ் 13 வது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், மலையாளத்தில் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கு, மற்றும் தமிழில் அடுத்தடுத்த சீசன்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கொரோனா வைரஸ் பரவுதலின் காரணமாக தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது.