தந்தையர் தினத்தை முன்னிட்டு வினிஷா விஷனின் ‘எந்தை’ குறும்படம் வெளியீடு….!

சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

இதன் நிர்வாக இயக்குநரான கே.வி.கதிரவன், டாக்டர் வினிஷா கதிரவன் பிரதானகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் டி.குமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு சதீஷ் ஒளிப்பதிவும்,குமார் ஆன்லைன் எடிட்டிங்கும்செய்துள்ளனர். இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்துள்ளார்.