சென்னை:

அமலாக்கத்துறையின் சென்னையில் உள்ள 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் நேற்று 16 மாநிலங்களில் அமலாக்காத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.

சென்னை, கொல்கத்தா, டில்லி, ஆமதாபாத், சண்டிகார், பாட்னா, பெங்களூரு, ராஞ்சி உள்பட சுமார் 100 இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டம் மற்றும் அன்னிய செலாவணி பராமரிப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், சந்தேகத்திற்குரிய நபர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் அலுவலகத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த மெகா சோதனையை அமலாக்கத்துறை நடத்தியுள்ளது.