டில்லி:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டனர். அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்க நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி இன்று உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டப்படி கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்க பிரிவு அதிகாரிகள் முடக்கியிருப்பது பொய் மற்றும் யூகங்களின் பைத்தியக்கார கலவையாக உள்ளது’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ‘‘என்னை பயமுறுத்தும், எனது குரலை அட க்கும் நோக்கத்துடன் அமலாக்கப் பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’’ என்றார்.

‘‘அமலாக்க பிரிவின் செய்திகுறிப்பை நான் படித்தேன். இதில் அமலாக்க பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்து ஒதுங்கியுள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே குற்றப்பத்திரிக்கையில் இருந்து நீ க்கி சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இந்த முடக்க உத்தரவு கிடைத்தவுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி வாரியம் அதிகாரிகளை சிபிஐ விசாரித்துள்ளது. இந்த வாரியத்தில் உள்ள அரசு செயலாளர் அ ந்தஸ்திலான அதிகாரிகள் உரிய முறையில் அங்கிகரித்து, இதற்கு அனுமதி அளிக்கும் நிதியமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதன் பேரில் சாதாரண முறையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தற்போது ரூ. 1.16 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது. ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிவி க்கப்பட்டுள்ளது.