மும்பை: அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்றவை நாட்டின்  எல்லைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் ” என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான பத்ரிகையான சாம்னா தலையங்கம் தீட்டி உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், சிபிஐ, அமலாக்கத்துறையைக் கொண்டு குடைச்சல் கொடுத்து வருகிறது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும்  அரசான சிவசேனா தலைமையிலான பாஜக அரசும் பாஜக அரசுமீது குற்றம் சாட்டி உள்ளது.

பண மோசடி செய்ததாக சிவசேனா  எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக்கை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது. இதனால் கடுப்படைந்துள்ள சிவசேனா, மத்திய பாஜக அரசு,  மாநில அரசு மீது  குறிவைத்துள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளது.

சிவசேனா தனது ஊதுகுழலான “சாம்னா” ல் மத்திய பாஜகஅரசின் நடவடிக்கை குறித்து தலையங்கம் எழுதி உள்ளது. அதில், எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் போட்டியாளர்களைக் குறிவைக்க மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்குள் நுழையும் பயங்கரவாதிகளை சமாளிக்க அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ “எல்லைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்று  தெரிவித்திருப்பதுடன். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை, “பயங்கரவாதிகள் என்று  அழைக்கப்பட்டதையும், அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து இருப்பதுடன்,  வட இந்தியாவின் குளிர்ந்தகாற்று  வீசும் இந்த நேரத்தில், அவர்கள் மீது தண்ணீர் பிரங்கிகளை கொண்டு தாக்கியது,  “கொடூரமானது” என்றும் விமர்சித்துள்ளது.

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரால் கட்டப்பட்டது” என்பதை குறிப்பிட்டு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபபாய் பட்டேல்,  விவசாயிகளை வழிநடத்தியுள்ளதாகவும், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர், ஆனால், தற்போது விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டு  “அவரது சிலை இப்போது அழுது கொண்டிருக்கும் என்று தெரிவித்து உள்ளது.

எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் போட்டியாளர்களை குறிவைக்கவே, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற  மத்திய ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவர்கள் மூலம்  மத்திய அரசாங்கம் எதிர்ப்பை நிறுத்த நினைக்கிறது, அவர்கள் சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் போன்றவற்றை பயன்படுத்தி, அவர்களின் வீரத்தை நிரூபிக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால், ஒவ்வொரு முறையும் தோட்டாக்கள் வேலை செய்யாது.

டெல்லியின் எல்லைக்குள் வரும்,  எங்கள் விவசாயிகள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால்,  பயங்கரவாதிகள் ஜே & கே எல்லையில் நுழைகிறார்கள். இதுபோன்ற சமயங்களில், அமலாக்கத்துறை மற்றும்  சிபிஐ, எல்லைகளுக்கு அனுப்ப வேண்டும். வேறு வழியில்லை …  என்றும் தெரிவித்துஉள்ளது.

“பாஜக அரசு நாட்டின் சுற்றுச்சூழலை அழிப்பது மட்டுமல்ல, எதேச்சதிகாரத்தையும் அழைக்கிறது. காலிஸ்தான் தலைப்பு முடிந்துவிட்டது, அதற்காக இந்திரா காந்தி மற்றும் ஜெனரல் அருண்குமார் வைத்யா ஆகியோர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஆனால் பாஜக அந்த தலைப்பை மீண்டும் கொண்டு வந்து பஞ்சாபில் அரசியல் செய்ய விரும்புகிறது “இது ஒரு தீப்பொறியைப் பற்றவைத்தால் அது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்”

இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.