சென்னை

ரும் அக்டோபர் 1 முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர உள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன.   இதற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.  இதில் கோவை மாணவி சஷ்மிதா 199.67 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.  இரண்டாவதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மற்றும் மூன்றாவதாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவியா வந்துள்ளனர்.

தமிழக அமைச்சர் அன்பழகன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளை வெளியிட்டுள்ளார்    சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை  கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அக்டோபர் 8 முதல் 27 வரை 4 கட்டங்களாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.   துணை கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக நடைபெற உள்ளது.  அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதி பட்டியலின மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.