சென்னை

டந்த 2017 ஆம் வருடம் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களில் முதல் செமஸ்டர் தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.   சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.   அரசு ஒதுக்கீட்டுக்கான இந்தக் கல்லூரியின் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டன.   மொத்தம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வை 1,13, 298 பேர் எழுதினர்.    அதில் 36179 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.  அதாவது சுமார் 31%   மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.   அதில் கணக்குப் பாடத்தில் 43.67% மாணவர்களும், இயற்பியலில் 52.77% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.      மொத்த மாணவர்களில் ஆங்கில மொழி வழி கல்வி கற்பவர்களை விட தமிழ் மொழி வழி கல்வி கற்பவர்கள் 2.82 %  மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.