பொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் முடிவு!

சென்னை,

ண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கும் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வருடந்தோறும் அரசு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கலந்தாய்வை புறக்கணிக்கப்போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

மேலும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில் இதுவரை புதிய துணைவேந்தர் இதுவரை நிரப்பப்படவில்லை என்றும்,

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும்  பேராசிரியர்கள் புகார் கூறி உள்ளனர்.

துணைவேந்தர் இல்லாததால் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இதுவரை நடத்தப்படவிலை என்றும், தற்போது அரசு செயலரை வைத்து பட்டமளிப்பு விழா நடைபெற அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தினால், அதை புறக்கணிக்கவும் பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.