ஆகஸ்டு 31ந்தேதி வரை பொறியியல் கலந்தாய்வு: உச்சநீதி மன்றம் அனுமதி

சென்னை:

மிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி அளித்து உள்ளது.

2ம் கட்டமருத்துவ கலந்தாய்வுக்கு சென்னை  உயர்நீதி மன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து,  தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்க அனுமதி கோரி தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில், நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரத்தால் மருத்துவக் கலந்தாய்வு முடிவடையாமல் இருப்பதையும், மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும்  எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில்  பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடத்திக் கொள்ள அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

இந்த வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.