பொறியியல் கவுன்சிலிங்: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

--

சென்னை,

பொறியியல் படிக்க விருப்பமுள்ளவர்கள் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்படிப்பான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வில்(tnea) பங்கேற்பதற்கான ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் இன்று தொடங்குகிறது.

பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும்,  கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கன்ட்ரோலில் வரும்  500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 2017-2018க்கான கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 27ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tnea.ac.in/index.php

You may have missed