பொறியியல் கலந்தாய்வு முடிவு: 1லட்சத்து 2264 இடங்கள் காலி…. அதிர்ச்சி

சென்னை:

ண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இந்த கலந்தாய்வில்  42 சதவீத இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. மேலும் 1லட்சத்து 2264 இடங்கள் பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளது.

இதன் காரணமாக பல கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில்,  6786 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து 2வது கட்ட கலந்தாய்வு  கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தது. இந்த கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதிலும் பல கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் பல கல்லூரிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நாட்டிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன. இதில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது 596 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 509 கல்லூரிகள் மட்டுமே பங்கேற்றன.

இந்த நிலையில், 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத  மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளதல், மீதமுள்ள நூற்றுக்கணக்கான கல்லூரிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.

2ம் கட்ட கலந்தாய்வு முடிவில்,  9 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் கோவையில் உள்ள பிஎஸ்ஜி டெக் தனியார் கல்லூரி  உள்பட 10 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவிகித மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

சுமார்,  268 கல்லூரிகளில் 100க்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது.

150 கல்லூரி களில் 50 க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

47 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

27 கல்லூரிகளில் 5க்கும் மகுறைவான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த நடிகர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி உள்பட 5 கல்லூரிகளில் இருவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

9 கல்லூரிகளில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

மொத்தம் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 பொறியியல் இடங்களில், 74 ஆயிரத்து 601 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இதில் 72,648 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டதாகும்.

இவை தவிர  1 லட்சத்து 2 ஆயிரத்து 264 இடங்கள் பொறியியல் படிப்புக்கான இடங்கள்  காலியாக உள்ளது.

அதே நேரத்தில் சி.எஸ்.சி, ஐடி போன்ற படிப்புகளில் கடந்த ஆண்டுகளை விட அதிக மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர். மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகளில் சேர்க்கை குறைந்துள்ளது.

தமிழ் வழிபொறியியல் படிப்பில் மிக குறைந்த அளவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பாடத்திட் டத்தில்

கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பது பொறி யியல் பட்டதாரிகளின் வேலையின்மையை எதிரொலிப்பதாக பார்க்கப்படுகின்றது. இது தமிழக கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலையின்மையையே இது எடுத்துக்காட்டுகிறது.