தமிழகத்தில் 2019ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை:

மிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று  சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு  நடைபெற்று வருகிறது.

முதல் நாளான இன்று கலந்தாய்வில் பங்கேற்க 141 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக தொழில்நுட்பக் கல்வி  இயக்ககம் நடத்துகிறது.  பி.இ., பி.டெக் படிப்பில் சேர ஒரு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித் திருந்த நிலையில், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்கியது. தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.  இன்று முதல் வரும் 27- தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், நாளை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.