சென்னை :
ண்ணா பல்கலைக்கழக முதல் சுற்று கலந்தாய்வில் 22 சதவீதம் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இம்மாதம் 8-ம் தேதி ஆரம்பித்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வின் முதல் சுற்று நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 7510 பேர் இந்த சுற்றில் பொறியியல் படிக்க தேர்வாகி இருக்கிறார்கள். கடந்த 2019 ம் ஆண்டு முதல் சுற்றில் 9872 பேர் கலந்து கொண்ட நிலையில் 6740 பேர் தேர்வாகி இருந்தனர், இந்த ஆண்டு முதல் சுற்றில் மொத்தம் 12263 பேர் கலந்து கொண்டனர்.
928 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிண்டி பொறியியல் கல்லூரியை தேர்ந்துடுத்துள்ளனர், அண்ணா பல்கலை வளாகத்தை தொடர்ந்து கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் சேருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
பொது பிரிவில் 3896 பேரும் 1983 பிற்படுத்தப்பட்டோர் 1084 மிகவும் பிற்டுத்தப்பட்டோர் 326 தாழ்தப்பட்டோர் 10 பழங்குடியினர் தவிர அருந்ததியர் 23 மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவை சேர்ந்த 188 பேர் இந்த சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸை தொடர்ந்து இன்பார்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டும் மாணவர்கள், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடப்பிரிவை கடந்த ஆண்டை விட குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்ந்துடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டு முதல் சுற்றில், இன்பார்மேஷன் டெக்னாலஜி 305 பேர் மட்டுமே தேர்வு செய்தனர் இந்த ஆண்டு அது 408 ஆக உயர்ந்துள்ளது, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் சென்ற ஆண்டு 1127 பேர் தேர்ந்தெடுத்த நிலையில் இந்த ஆண்டு 1046 ஆக குறைந்துள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சென்னை மண்டலத்தில் உள்ள ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் தற்போது சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக இடங்கள் பெரும்பாலும் பூர்த்தியாகிவிட்ட நிலையில் அடுத்த சுற்றுகளில் இந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.