சென்னை:

டப்பு ஆண்டு பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், இன்று பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலந்தாய்வு  www.tneaonline.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் நடைபெறுவதால், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.

நடப்பு ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையை  தமிழக தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் கடந்த மாதம் 25ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு  கடந்த மாதம் 28-ம் தேதிவரை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று முதல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது. கலந்தாய்வு ஆன்லைன் வழியாகத்தான் என்பதால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே www.tneaonline.in என்ற தளத்தில் அப்ளை செய்யலாம். இதற்காக அவர்களை வழிநடத்திச் செல்லவும், இதுபற்றிய சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும் தமிழகம் முழுவதும் 48 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டில் இருந்து கலந்துகொள்ள முடியாத மாணவர்கள், அவர்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வு இன்று முதல் வரும் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றைய சுற்றில் பங்குபெறும் மாணவர்கள் இன்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.

முதல் சுற்றில் தரவரிசையில் 1 முதல் 9,872 வரை உள்ள மாணவர்களும் அடுத்த சுற்றில் 9873 முதல் 30,926 இடங்களில் உள்ள மாணவர்களும், 3வது சுற்றில் 30, 927 முதல் 64,093 இடங்களில் உள்ள மாணவர்களும் கடைசி சுற்றில் 64, 094 முதல் 1,01,692 வரை உள்ள மாணவர்களும் பங்குபெறுவர்.

முதல் சுற்று மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதியும், ஜூலை 18, 23, 28 ஆகிய தேதிகளில் முறையே அடுத்தடுத்த சுற்றில் இருக்கும் மாணவர்களின் இறுதி ஒதுக்கீடு வெளியிடப்படும்.

இந்தக் கலந்தாய்வில் எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவு மாணவர்களுக்கு 1000 ரூபாய் கட்டணமும், இதரப் பிரிவினருக்கு 5000 ரூபாய் கட்டணும் செலுத்த வேண்டும்.