பொறியியல் பட்டப்படிப்பு2019: இதுவரையில் 1,07,062 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்!

சென்னை:

பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1,07,062 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம் தெரிவித்துஉள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாண வர்கள்  இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்ட நிலையில், அதறக்க 42  இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது. பொறியியல் பட்டப் படிப்பில் சேர பொதுப் பிரிவினர் 500 ரூபாயையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 250 ரூபாயையும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

முதல் நாளில் மட்டும் 15,000 மாணவ மாணவிகள்  விண்ணப்பித்திருந்த நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 7ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பிக்க மே 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இதனை தொடர்ந்து சான்றிதழ்கள் ஜூன் 6 ம் தேதி முதல் 11 தேதி வரை சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 17 ஆம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அதன்பின்னரே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.