சென்னை:

மிழ்நாட்டில் 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சுமார் 87 சதவிகித இடங்களில் காலியாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாக உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படித்தவர்களுக்கு தேவையான  வேலைவாய்ப்பு கிடைக் காத நிலையில், பொறியியல் படிப்பு மீதான மோகம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடை யேயும் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக பொறியியல் படிப்பை தேர்வு செய்வது குறைந்து விட்டது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந் துள்ள நிலையில், சுமார் 87 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் பொறியியல் படிபப்புக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 582 இடங்கள் உள்ள நிலையில், 21 ஆயிரத்து 532 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதாவது மொத்தமுள்ள இடங்களில் 13 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த காலக்கட்டங்களில், சுமார் 40ஆயிரம் இடங்கள்  நிரப்பப்பட்டிருந்த  நிலையில், இந்த ஆண்டு  21 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு இறுதியில்,   72 ஆயிரத்து 648 இடங்கள்  மட்டுமே நிரம்பியிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் இது மேலும் குறைய வாய்ப்பு இருப்ப தாகவும், அதிகப்பட்சமாக  60 ஆயிரம் மட்டுமே நிரம்பும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொறியியல் கல்வி மீதான மோகம் மக்களிடையே அடியோடு குறைந்துவிட்டதை இது எடுத்துக் காட்டுக்கிறது.