பொறியியல் கல்வி பொதுப்பிரிவுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை

பொறியியல் கல்வியின் பொதுப்பிரிவு இடங்களுக்கு இன்று முதல் இணையத்தின் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது.

இந்த வருடம் முதல் பொறியியல் கல்வியில் சேர இணையம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.   அதன்படி  இக்கல்விக்கான சிறப்புப் பிரிவு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.    இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜுலை 16 மற்றும் 17 தேதிகளைல் நடந்தது.   வொக்கேஷனல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 18 முதல் 20 வரையிலும் சிறப்புப் பிரிவு இடங்களுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு 21,22 தேதிகளிலும் நடந்தது.

இன்று முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.   இணையம் மூலம் மாணவர்கள் வரும் ஜூலை 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விருப்பக் கல்லூரி பட்டியலை தேர்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.  மற்றும் சீட் லாக் செய்ய வேண்டும்.   வரும் 28 ஆம் தேதி எந்தக் கல்லூரியில் தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இணையத்தில் அரிந்துக் கொள்ளலாம்.

ஜூலை 29ஆம் தேதி மாலைக்குள் அங்கு சேருவதை இணையம் மூலம் உறுதி செய்ய வேண்டும்.  அவ்வாறு உறுதி செய்த மாணவர்களுக்கு 30 ஆம் தேதி அன்று அந்த இடங்கள் நிரந்தர ஒதுக்கிடு செய்யப்படும்.    அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் இது போல 5 சுற்று கலந்தாய்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.