சென்னை, 

ந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரா னிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 66 கிராஜூவேட் என்ஜினியர் ட்ரெய்னி பணியிடத்திற்கான பணி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்   21.12.2017. விண்ணப்பிப்பவர்களுக்கு ஜனவரி 7ம் தேதி ஆன்லைனில் தேர்வு  கணினி வழியில் நடத்தப்படும் என்றும், தமிழகத்தில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

25 வயது பூர்த்தியடைந்த பிஇ, பிடெக் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், இசிஇ, ஈஈஈ, சிஎஸ்ஈ போன்ற பிரிவுகளின் கீழ் படித்து முடித்த பிஇ, பிடெக் பட்டதாரிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இளநிலை பொறியியல் படிப்பை முடித்து விட்டு முதுநிலை படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ‘‘http://careers.ecil.co.in” or “http://www.ecil.co.in” என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் தேர்வில்  வெற்றி பெறுபவர்கள் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார் என்றும், தேர்வு செய்யப்பட்டவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த டிரெய்னி பணியின்போது மாதம் ரூ.38ஆயிரம் ஸ்டைபண்ட் வழங்கப்படும் என்றும், அதன் பின்னரே பணி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தகுதியுடைய இளம் இஞ்சினியர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.