டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாடுமுழுவதும் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது குறித்து,  மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நாடு முழுவதும் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க இருக்கிறது.  அதன்படி தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பான நடைமுறைகளை வகுக்க, ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின்படி வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறி உள்ளார்.