தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் படிப்புக்கான தர வரிசை பட்டியல்: நாளை வெளியாகிறது

சென்னை:

மிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் கலந்தாய்வுக்கான தரி வரிசை பட்டியல் நாளை வெளியாகிறது.

அதுபோல எம்.பி.பி.எஸ் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் நாளை தர வரிசை பட்டியல் வெளியாகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில்  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த வர்களுக்கான தர வரிசை பட்டியல்  ‘வரும் 28ந் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. நாளை காலை 8.30 மணிக்கு தர வரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணைய தளததில்  வெளியிடப்படும் என்றும்,  பி.இ. படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 6-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளது.

அதுபோல  தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தேர்வு போக மீதம் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலையில் நடைபெற உள்ளது. 2,593 காலி இடங்கள்  மட்டுமே உள்ள நிலையில், 43,935 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த  நிலையில்  மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 28-ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.

கார்ட்டூன் கேலரி