பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்

சென்னை:

மிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிக்க விண்ணப் பித்தவர்களின் தர வரிசை பட்டியில் வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர வரிசை பட்டியலை வெளியிட்டார்.

பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த 1,59, 631 பேரில் 1,04, 453 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,76,875 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ரவி, மதுரையைச் சேர்ந்த ரித்விக், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ வர்ஷினி, கோவையைச் சேர்ந்த அர்ஜூன் அசோக், புதுக்கோட்டையைச் சேர்ந்த சுஜிதா ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி அப்துல் காதர், சிவகங்கை யமுனா ஸ்ரீ, திருவள்ளூர் நிஷா, தஞ்சாவூர் நிதீஷ்குமார், திருவள்ளூர் மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

தரவரிசை பட்டியலில் 10 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். 5,397விண்ணப்பங்கள் தேர்வாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலில் தவறிருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும்,  நடப்பாண்டில் 26 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்றார் அன்பழகன்.

தரவரிசைப் பட்டியல் www.annauniv.edu என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ. படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு,  அந்த விண்ணப்பங்களுக்கான  சான்றிதழ்களும சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலையில் தரவரிசை பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.

You may have missed