ஐபிஎல் திருவிழா – அமீரகம் வந்தனர் ஆஸ்திரேலியா & இங்கிலாந்து வீரர்கள்!

துபாய்: இங்கிலாந்து மண்ணில் போட்டித் தொடர்களை முடித்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, தனி விமானத்தில், அமீரகத்திற்கு வந்தடைந்துள்ளனர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்.

அங்கு அவர்கள், தங்கள் அணியினருடன் சேர்ந்துகொள்ளும் முன்னதாக, 3 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

துபாய் வந்திறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரின் கவச உடையணிந்த புகைப்படம், சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 21 வீரர்கள், மான்செஸ்டரிலிருந்து துபாய் வந்தடைந்துள்ளனர். அவர்கள் விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் அவசரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.