லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் 337 ரன்களை விரட்டிய இந்தியா, 306 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 111 ரன்கள் அடித்தார். ராய் மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடி அரைசதம் அடித்தனர். இதனால், அந்த அணி பெரிய ஸ்கோரை எட்டியது.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சு எடுபடாத நிலையில், வேகப்பந்து வீச்சு மட்டுமே எடுபட்டது. முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்தார். கேப்டன் கோலி பவுலிங் வழங்குவதில் சொதப்பினார். 310 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இங்கிலாந்து அணியை 337 ரன்களை எடுக்கவிட்டனர்.

338 ரன்களை நோக்கி பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் டக் அவுட் ஆனார். அவர் 9 பந்துகளை வீணாக்கிவிட்டுச் சென்றார். பின்னர், ரோகித்தும் கோலியும் பொறுப்பாக ஆடினர். விராத் கோலி 66 ரன்களில் அவுட்டாக, ரோகித் சதமடித்தார். அவரும் 102 ரன்களில் அவுட்டாக, பாண்ட்யாவும் ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆடினர். ஆனால், அவர்களாலும் நிலைத்து நிற்க முடியவில்லை.

இறுதி ஓவர்களில் ஆடிய தோனியும் கேதார் ஜாதவும் மிகவும் மந்தமாக ஆடினர். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி தோல்விக்காகவே ஆடியது. இங்கிலாந்து பவுலர்கள் நிறைய ஸ்லோயர் பந்துகளாக வீசினர். இறுதியாக, 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 306 ரன்களை மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இங்கிலாந்தின் பிளங்கட் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.