முதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியை, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், குவின்டன் டி காக் 30 ரன்களும், டூ பிளசிஸ் 58 ரன்களும், டுஸென் 37 ரன்களும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா.

பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பேர்ஸ்டோ 48 பந்துகளில் 86 ரன்களும், ஸ்டோக்ஸ் 37 ரன்களும் எடுக்க, 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்து வென்றது இங்கிலாந்து அணி. தற்போதைய நிலையில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.