உலகக்கோப்பை போட்டிகளின் ஜுன் 30 வரையான நிலவரப்படி, ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.

நியூசிலாந்தும் மூன்றாமிடத்தில் நீடிக்க, சமீபத்தில் நான்காமிடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இங்கிலாந்து, இந்தியாவை வென்றதன் மூலம் தற்போது மீண்டும் நான்காமிடத்தைக் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும், வங்கதேசம் 7 ஆட்டங்களில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும், இலங்கை 7 ஆட்டங்களில் விளையாடி 6 புள்ளிகளுடன் ஏழாமிடத்திலும், தென்னாப்பிரிக்கா 8 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளுடன் எட்டாமிடத்திலும் உள்ளன.

மேற்கிந்திய தீவுகள் 7 ஆட்டங்களில் விளையாடி 3 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் 8 ஆட்டங்களில் ஆடி புள்ளிகள் எதுவும் பெறாமல் கடைசி இடத்திலும் உள்ளன.