லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து, தற்போது வரை, 452 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்துள்ளது.
அந்த அணியின் டாம் சிப்லி 120 ரன்களை அடிக்க, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களை விளாசினார். ஜாஸ் பட்லர் 40 ரன்களை அடித்தார். ஜோ ரூட்டின் பங்கு 23 ரன்கள்.
விண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளும், கெமார் ரோச் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட்டில் ரன் எடுக்கத் திணறிய இங்கிலாந்து அணி, இந்த இரண்டாவது டெஸ்ட்டில் சுதாரித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியும் இதேபோன்று ரன்வேட்டை நடத்தும்பட்சத்தில் போட்டி, டிராவில் முடியும் வாய்ப்புகளே அதிகம்.
இப்போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.