கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 1 இன்னிங்ஸ் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் 499 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்கா. அந்த அணியால் எடுக்க முடிந்தது 209 ரன்களே. முதல் இன்னிங்ஸில் டி காக் மட்டுமே அரைசதம்(63) ரன்கள் அடித்தார்.

ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா எடுத்த ரன்கள் வெறும் 237 மட்டுமே. இந்தமுறை அரைசதம் அடித்தவர் கேஷவ் மகராஜ்.

கேப்டன் டூ ப்ளஸி 36 ரன்களும், டேன் பீட்டர்ஸன் 39 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட்களும், மார்க் வுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் டாம் பெஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இந்த வெற்றியின்மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.