இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மரணம்

ண்டன்

ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பாப் வில்லிஸ் மரணம் அடைந்தார்

கடந்த 1970களில் சர்வதேச கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பாப் வில்லிஸ் அறிமுகம் ஆனார்.   இவர் 1982 முதல் 1984 வரை இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியை வகித்துள்ளார்.   இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி அக்கால ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றவர் ஆவார்

பாப் வில்லிஸ் தலைமை பொறுப்பு வகித்த காலத்தில் 18 டெஸ்ட் பந்தயங்களிலும் 29 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி அவற்றில்  பல போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.    இவர் 90 டெஸ்ட் பந்தயங்களில் 325 விக்கட்டுகளையும், 64 ஒரு நாள்  போட்டிகளில் 80 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக பணியாற்றி உள்ளார்.  தற்போது 70 வயதாகும் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி நேற்று பாப் வில்லிஸ் மரணம் அடைந்தார்.    அவரது மறைவுக்குப் பல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.