ரஷ்யா : பியர் தட்டுப்பாட்டால் கலங்கும் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள்

மாஸ்கோ

ஷ்யாவில் கார்பன் டை ஆக்சைடு தட்டுப்பாட்டால் பியர் மற்றும் குளிர்பானங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி (ஃபிஃபா 2018) தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.     உலகெங்கும் உள்ள பல நாட்டு கால்பந்து ரசிகர்களும் ரஷ்யாவில் குவிந்துள்ளனர்.   அவர்களில் அண்டை ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

தற்போது ரஷ்யாவில் கார்பன் டை ஆக்சைட் தட்டுப்பாடு நிலவுகிறது.  சோடா மற்றும் குளிர்பானங்களின் தயாரிப்பில் மட்டும் இன்றி பியர் தயாரிப்பிலும் கார்பன் டை ஆக்சைட் உபயோகப்படுத்தப் படுகிறது.    இந்த கார்பன் டை ஆக்சைட் தட்டுப்ப்பாட்டினால் சோடா மற்றும் குளிர் பானங்கள் தட்டுப்பாட்டுடன் பியர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.

இந்த கார்பன் டை ஆக்சைட் தட்டுப்பாட்டினால் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் பாதிக்கப் பட்டுள்ளன. அது மட்டும் இன்றி கோகோ கோலா தொழிற்சாலை, ஹேன்கின் பியர் தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ரஷ்யாவில் கடுமையான வெப்பம் நிலவுவதால் ரசிகர்கள் வெப்பத்தை தணிக்க பியர் அருந்துகின்றனர்.   இங்கிலாந்து மக்களுக்கு உலகளவில் பியர் பிரியர்கள் என செல்லப் பெயர் உண்டு.   அந்த அளவுக்கு அவர்கள் பியர் அருந்துவார்கள்.    தற்போது இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பியர் தட்டுப்பாட்டினால் மிகவும் கலக்கமுற்றிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.