சுதந்திரத்துக்கு 70 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கால் பதிக்கும் இங்கிலாந்து துப்பாக்கி  நிறுவனம்

ண்டன்

ங்கிலாந்து நாட்டின் பழம்பெரும் ஆயுத நிறுவனமான வெப்லி அண்ட் ஸ்காட் இந்தியப் பொதுமக்களுக்குத் துப்பாக்கிகள் தயாரித்து வழங்க உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த 1790 ஆம் ஆண்டு வெப்லி அண்ட் ஸ்காட் என்னும் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது.  இந்த நிறுவனம் தயாரிக்கும் கைத்துப்பாக்கிக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருந்தது.   இந்தியா உள்ளிட்ட 15 உலக நாடுகளின் காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளுக்கு இந்நிறுவனம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வழங்கி வந்தது.

இந்த நிறுவனத்தின் புகழப் பெற்ற துப்பாக்கியான .38 ரிவால்வர் இந்திய கால்வதுறையினருக்கு 1990களில் ஒரு அடையாளமாக இருந்து வந்தது.   தற்போது வெப்லி அண்ட் ஸ்காட் நிறுவனம் இந்தியப் பொதுமக்களின் உபயோகத்துக்காக கைத் துப்பாக்கிகளைத் தயாரித்து வழங்க உள்ளது.  இந்தியாவின் சியால் மேனுபேகசரர்ஸ் உடன்  இந்நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை இட்டுள்ளது.

அதன்படி இந்நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள சாண்டிலா தொழிற்பேட்டையில் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இதற்கான உரிமம் கோரி இந்நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு விண்ணப்பித்து 2019 ஆம் ஆண்டு உரிமம் பெற்றுள்ளது.  கடந்த வாரம் இந்நிறுவனம் உத்தரப் பிரதேசத்தில் தொழிற்சாலையை தொடங்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த 80 களின் தொடக்கத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசு பொதுமக்கள் துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது.  அப்போது முதல் உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன.  இவை தேவைக்கு ஏற்ப கிடைக்காததால் விலை அதிகரித்தன.  எனவே மக்களிடையே துப்பாக்கிகள் வைத்திருப்பது குறைந்தது.  இதனால் இந்தியாவில் ஆயுத கலாச்சாரம் வெகுவாக குறைந்தது..

தற்போது  .32 ரிவால்வர் வகை துப்பாக்கிகளை இந்திய ராணுவ ஆயுத தொழிற்சாலை தயாரித்து வருகிறது.   இங்கிலாந்து நிறுவனம் தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்க இருப்பதால் அது இந்திய ராணுவத்துக்குப் போட்டியாக அமையக் கூடும் எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.  துப்பாக்கி சுடும் வீரர்கள் இடையே இந்தியத் துப்பாக்கிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  இங்கிலாந்து துப்பாக்கியால் அது குறையலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.