கோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும் 

--

ண்டன்

ங்கிலாந்து நாட்டில் கோடைப் பயணங்கள் தொடங்கும் வேளையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து நாட்டில் கோடையைக் கொண்டாட மக்கள் பல நாடுகளில் இருந்தும் வருவது வழக்கமாகும்.   கொரோனா தாக்குதலை முன்னிட்டு மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவது இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இங்கிலாந்து நாட்டில் சுமார் 2.87 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு அடைந்து இதுவரை 44,600க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் விதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன  எனவே  பிரான்ஸ் கிரீஸ், மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து கோடைக்காலத்தை அனுபவிக்கப் பயணிகள் வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.  இங்கிலாந்தின் மத்தியதரைக்கடலில் உள்ள  கடற்கரைகளுக்குப் பயணிகள் கூட்டம் சூரிய ஒளியில் நனையப்  படை எடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

ஆயினும் பல இடங்களில் இன்னும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   இங்குள்ள விடுமுறை விடுதிகள் கொரோனா தாக்குதலில் இருந்து எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை என்பது உறுதி செய்யப்படாத நிலை உள்ளது.   இதனால் பல விடுமுறை பயண ஏற்பாட்டாளர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்யத் தயங்கி வருகின்றனர்.

பிரிட்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் இயக்கம் மற்ற வருடங்களைக் காட்டிலும் தற்போது மிகவும் குறைவான நிலையில் உள்ளன.    ஆயினும் இங்கிலாந்து அரசு அந்நாட்டுக்கு வருவோருக்கு  தனிமை கட்டுப்பாடு விதிகளை எளிதாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   இதனால் மக்களுக்கு இங்கிலாந்தில் பயணம் செய்யத் தேவையான துணிச்சல் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.