இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் போட்டி: சென்னை வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கம்

ங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியில் இருந்து சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால், லாட்ஸில் நடந்த இரண்டாவது போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் மோசமாக விளையாடினார்கள்.

தினேஷ் கார்திக்

இதில் முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. . இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான் (29, 33) அதிக ரன்களை எடுத்தார்.

சரியாக விளையாடாததால்   இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.  இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம்  திட்டமிட்டிருக்கிறது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பந்த் ஆகிய இருவர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டனர். சீனியர் என்ற அடிப்படையில் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் நடந்த முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு இன்னிங்ஸிலும் தினேஷ் கார்த்திக் மொத்தம் 21 ரன்களே எடுத்திருக்கிறார்.  இதில் இரண்டு டக் அவுட்டுகளும் அடங்கும்.

ரிஷப் பந்த்

ஆகவே “பல வருடங்களுக்கு பிறகு  மிக முயற்சி எடுத்து அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இளைஞரான ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையே விளையாடிய ரிஷப் பந்த் ரன்களை குவித்ததோடு, எசக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: England - India cricket : Chennai cricketer Dinesh karthik relieved, இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் போட்டி: சென்னை வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கம்
-=-