143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி சரியும் இங்கிலாந்து!

லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 38 ஓவர்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த அணியின் ரன் ரேட் 3.78 என்பதாக உள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸம்பா சிறப்பாக பந்துவீசி, இதுவரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜோ ரூட் 39 ரன்களுடனும், இயான் மோர்கன் 42 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தற்போது கிறிஸ் வோக்ஸ் 20 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாட் கம்மின்ஸ் 1 விக்கெட் எடுத்துள்ளதோடு, 3 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஹேசில்வுட் 2 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.