ண்டன்

ப்கானிஸ்தானில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புத்த மத கலைப் பொருட்களை இங்கிலாந்து திரும்ப அளிக்க உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கு மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது.   ஆப்கானிஸ்தானில் அரசியல் குழப்பங்கள் நிறைந்திருந்த நேரத்தில் பல கலைப் பொருட்கள் காணாமல் போயின.   அவைகளில் பெரும்பாலானவை புத்த மத சின்னங்கள் ஆகும்.   இவை அனைத்தும் இங்கிலாந்து நாட்டினரால் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அங்கிருந்த அருங்காட்சியகங்களில் இவை பார்வைக்கு வைக்கப்பட்டன.  பல புராதன காலத்து வேலைப்பாடுகளுடன் காணப்படும்  மரப்பொருட்கள், தவம் செய்யும் புத்தர் சிலை.  புத்தரின் முழு உருவ படங்கள், வழுக்கை தலையுடன் உள்ள புத்த பிட்சு சிலை, பக்தரகள் சிலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இங்கு உள்ளன.

இவைகளை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அளிக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.  இது குறித்து அருங்காட்சியக ஆய்வாளர் ஜான் சிம்சன், “இந்த புத்த மத கலைப் பொருட்கள் யாவும் கடந்த 2001 ஆம் ஆண்டு இங்கு எடுத்து வரப்பட்டுள்ளது.   இவை அனைத்தும் தாலிபன்கள் புத்த மத கோவில்களை உடைக்கும் போது கிடைத்தவைகள் ஆகும்.

இவை அனைத்தும் சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.  தற்போது இந்த பொருட்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானுக்கு  திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.   நல்லெண்ண அடிப்படையில் இந்த பொருட்கள் திரும்ப அளிக்கப்பட உள்ளன.   இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகத்துக்கு விரைவில் அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.