2வது ஒருநாள் போட்டி – முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42/2

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி, 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில், இப்போட்டியில் வென்று தொடரை இப்போதைக்கு சமன்செய்ய அந்த அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 21 ரன்கள் எடுத்த நிலையில், ரன்அவுட் ஆனார். பேர்ஸ்டோ டக்அவுட் ஆனார். தற்போது ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயான் மோர்கன் ஆகியோர் கலத்தில் உள்ளனர்.

இதுவரை 12 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed