ரசிகர்கள் இல்லாத முதல் டெஸ்ட் துவங்கியது – இங்கிலாந்து பேட்டிங்!

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் , ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பேட்டிங் தேர்வுசெய்து களமிறங்கியுள்ளது இங்கிலாந்து அணி.

அந்த அணி 4 ஓவர்களில், 3 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. டாம் சில்பிளே டக் அவுட் ஆகியுள்ளார். ஷனோன் கேப்ரியல் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டம் தற்போது மழையால் தடைப்பட்டுள்ளது.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, கொரோனா பரவல் மற்றும் பீதிக்கு இடையே, இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

தனிமைப்படுத்திக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடன் ஹ, ரசிகர்களுக்கு அனுமதியில்லாத முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ உள்ளிட்ட சில வீரர்கள் இந்தப் பயணத்தைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed